மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது.
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் :
மீன் - 2 பெரிய துண்டுகள் ( 200 கிராம் )
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை :
மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து நன்றாக பிரட்டவும்.
இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்த பின் அதில் மீனை போட்டு வேக விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.
இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.
குறிப்பு :
மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டை நசுக்கி போட்டு இறக்கினால் இன்னும் சுவை கூடும்.
அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.
இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.