ஆட்டு ஈரல் (Goat Liver) சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள் உள்ளது. இதில் இரும்புச் சத்து குறைபாடு, ஹீமோ குளோபின் அளவு குறைபாடு இருந்தால் சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.
பொதுவாக சிலர் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டு இறைச்சி,கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி,பன்றி இறைச்சி போன்று பல வகை உள்ளது.
வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம் மற்றும் செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. மற்ற இறைச்சியை விட ஆட்டு இறைச்சியில் சத்துகள் அதிகமாக இருக்கும்.
அதிலும் ஆட்டு இறைச்சியின் பாகங்கள் சற்று ஆரோக்கியம் நிறைந்தே இருக்கும். நன்மைகள் ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்து விடும்.
ரத்த சோகை குறைபாடு நீங்கும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், ஈரல் ஒரு நல்ல ஒரு உணவாக இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச் சத்துக்களும் ஈரலில் இவற்றில் இருக்கும். ஈரல் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கும்.
சரி இனி ஆட்டு ஈரல் பயன்படுத்தி அருமையான ஆட்டு ஈரல் ஃப்ரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருள்கள் :
ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தளை - சிறிது
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு !
செய்முறை
ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் ஈரல் மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேக விடவும்.
கண்கள் எதுக்கு அடிக்கடி துடிப்பது ஏன்?
நன்கு வெந்ததும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது சுவையான ஆட்டு ஈரல்ஃப்ரை ரெடி!