அருமையான கேரளா பீஃப் ஃபரை செய்வது எப்படி?





அருமையான கேரளா பீஃப் ஃபரை செய்வது எப்படி?

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. வாரம் ஒரு முறை கறிக் கோழி, ஆட்டிறைச்சி, மீன் ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்வது நல்லது. மேற் சொன்னவை நடுத்தர மக்களின் உணவுப் பழக்கம். 
கேரளா பீஃப் ஃபரை
ஞாயிறு அசைவ உணவு இல்லை என்றால் அது ஞாயிறு இல்லை. கிராமங்களில் ஞாயிறு அசைவம் எல்லாம் கிடையாது. ஊர்த் திருவிழா முடிந்ததும் ஊர் முழுவதும் கறி வேகும் மணம் வரும். 

எல்லோர் வீட்டிலும் கறி சோறு தான். ஆடி முதல் நாள் கறி. இப்படி நாள், கிழமை பார்த்து சமைத்து உண்பர்.மெலிந்த உடலைத் தேற்ற உதவுகிறது.

மாட்டிறைச்சி எலும்புருக்கி நோயைக் குணமாக்க உதவுகிறது. உடலுழைப்பாளர்கள், விளையாட்டு வீரா்களுக்குப் போதுமான உடலாற்றலை அளிக்கிறது. 
இரத்தசோகை, இரத்தத்தில் சிவப்பணுக்கள் போதிய அளவில் இல்லாமை, ஆகிய நோய்களைக் குணமாக்க உதவுகிறது.

வாய்ப்புண், வயிற்றுப்புண், மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமைப்புண் ஆகியவற்றைக் குணமாக்க தோஞ்சல் (எ) ஆட்டின் கொழுப்புக் குடல் சூப், ஆட்டின் மண்ணீரல் சூப், உதவுகிறது. 
வெள்ளாட்டுக் கொழுப்பு சமையல், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. பித்தத்தைத் தணிக்க உதவுகிறது. சரி இனி மாட்டிறைச்சி பயன்படுத்தி அருமையான கேரளா பீஃப் ஃபரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள் :

பீஃப் – ½ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 1 கப்

இஞ்சி – 1 ½ மேஜைக்கரண்டி

பூண்டு - 1 ½ மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய் – 7

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ¼தேக்கரண்டி

நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி

கரமசாலா தூள் - 1 ½ தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 ½ தேக்கரண்டி
வினிகர் – 2தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – ¾கப்(துண்டுகளாக வெட்டியது)

கறிவேப்பிலை – 2 கொத்து
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !
செய்முறை :

வத்தல் மிளகாயை லேசாக இடித்துக் கொள்ளவும். மாட்டிறச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

பின்கு பிரஷர் குக்கரில் மாட்டிறச்சியுடன் 2 மேஜைக்கரண்டி நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். மாட்டிறச்சியிலுள்ள நீர் வெளியேறாமல் இருந்தால் அந்த நீர் வெளியேறும் வரை மீண்டும் வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தேங்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கறிவேப்பிலையை தாளிக்கவும்.
பின்பு அதனுடன் வறுத்த தேங்காய் மற்றும் வேக வைத்த இறச்சியை சேர்த்து குறைந்த தீயில் 15 – 20 நிமிடம் வைத்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் இடையில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பீஃப் ஃப்ரை ரெடி!
Tags: