கேரளா பலாப்பழ பாயாசம் செய்முறை / Kerala jack fruit payasam !





கேரளா பலாப்பழ பாயாசம் செய்முறை / Kerala jack fruit payasam !

தேவையான பொருட்கள் :

பலாப் பழச் சுழைகள் - 20, 30 (வருக்கை சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா - தேவையான அளவு

ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை :
கேரளா பலாப்பழ பாயாசம்
முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்து விடவும். பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவை யற்றவைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

ஏலக்காயை பொடித்து வைத்துக்  கொள்ளவும். பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப் பழசுழைகளை இட்டு வதக்கவும். 

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேக விட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்து விடலாம். 

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இது மிக சுவையாக இருக்கும்
Tags: