மட்டனை எத்தனையோ வழிகளில் சமைத்து சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோருக்கு பிடித்தது மட்டன் சுக்கா தான்.
அந்த மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி.
இதனை பேச்சுலர்கள் கூட விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கிலோ
கிரேவிக்கு
சின்ன வெங்காயம் – 2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் – 2
நீர் – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 மேஜைக் கரண்டி
மல்லித் தளை – 3 மேஜைக் கரண்டி
வினிகர் – தேவைப் பட்டால்
உப்பு – தேவையான அளவு
அரைக்க
இஞ்சி – 1 மேஜைக் கரண்டி
பூண்டு – 11/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மல்லி தூள் - 1½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 மேஜைக் கரண்டி
நல்ல மிளகு தூள் – ½ தேக்கரண்டி
கிராம்பு – 7
பட்டை – 2 இஞ்ச்
ஏலக்காய் – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை
சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சின்ன வெங்காயம் கறி வேப்பிலை உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் லேசாக பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
சின்ன வெங்காயம் கறி வேப்பிலை உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் லேசாக பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட் களை நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த விழுதை வெங்காயத் துடன் சேர்த்து வதக்கவும்.
1 கப் நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்பு சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை சேர்த்து 4-5 விசில் வரும் வரை வைக்கவும்.
பின்பு மல்லித் தளை சேர்க்கவும். தேவைப் பட்டால் சிறிது வினிகர் சேர்க்கவும்.
5-10 நிமிடம் வேக வைக்கவும்.
மட்டன் கறி ரெடி.