தேவையான பொருள்கள் : -
பால் - 3 கப்,
இடியாப்ப மாவு - 1/4 கப்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
பாதாம் பருப்பு (வெந்நீரில் ஊறவைத்து தோலுரித்து பொடிக்கவும்) - 3/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1/4 கப்,
ரோஜா பன்னீர் - 1 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - 3 துளி,
தோல் உரித்து நறுக்கிய பிஸ்தா - 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க செர்ரி பழம் - சிறிது.
செய்முறை : -
அரிசி மாவு, சோள மாவு, உப்பு, சர்க்கரை, பால் 1/2 கப்புடன் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
மீதமுள்ள பாலை கொதிக்க விடவும். சிறிதளவாக கலக்கி வைத்த அரிசி மாவு கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கட்டி விழாமல் 5 நிமிடங்கள் சிம்மில் கலக்கவும்.
பொடித்த பாதாம் பொடியை கலக்கி கட்டியில்லாமல் கலக்கவும். பன்னீர், ரோஸ் எசென்ஸ் சேர்த்து இட்லி மாவு பக்குவம் வரும் வரை கலக்கி அடுப்பை விட்டு இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும். நன்றாக ஆறிய பின் பிஸ்தா பருப்பு, செர்ரி பழம் தூவி
அலங்கரித்து பரிமாறவும்.