ஸ்பெஷல் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி?





ஸ்பெஷல் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி?

ஆட்டிறைச்சியானது நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது. 
ஸ்பெஷல் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி?
எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து அதனுடைய உறுப்பையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஆட்டிறைச்சியில் விட்டமின்கள் B1, B2, B3, B9, B12, E மற்றும் K ஆகியவை அடங்கியுள்ளன. அது மட்டுமில்லாமல் கோலைன், மக்னேசியம், கால்சியம், இரும்பு சத்து, சிங்க், காப்பர், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.

ஆட்டிறைச்சியில் நல்ல கொழுப்புகள் நம் உடலை ஆரோக்கியம் குறையாமல் காக்கிறது. ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய பார்வை கோளாறுகள் சரியாகி, 
கூர்மையான பார்வை மற்றும் நமது கண்களுக்கு மிகுந்த வலிமை கிடைக்கிறது. சரி இனி ஆட்டிறைச்சி கொண்டு ஸ்பெஷல் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

எலும்பில்லாத மட்டன் – 7 பெரிய துண்டுகள்

மிளகாய் தூள் – 2 மேஜைக் கரண்டி

அரிசி மாவு – 2 மேஜைக் கரண்டி

கடலை மாவு – 2 மேஜைக் கரண்டி

மைதா – 2 மேஜைக் கரண்டி

உப்பு – தேவைக்கு
கரம் மசாலா தூள் – 2 மேஜைக் கரண்டி

வினிகர் – 2 மேஜைக் கரண்டி

நீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க
ஸ்பெஷல் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் பிளாஸ்டிக் கவரை விரித்து வைத்து அதன் மீது மட்டன் துண்டுகளை எடுத்து தனித்தனியே வைக்கவும்.

அவற்றை வேறெரு பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொள்ளவும் பின்பு ஒரு சுத்தியலின் உதவியால் அதனை தட்டையாக்கிக் கொள்ளவும்.
மட்டன் துண்டுகள் ரெடி கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மைதா மாவு சேர்க்கவும் அதனுடன் அரிசி மாவு சேர்க்கவும் 

மிளகாய் தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் வினிகர் சேர்க்கவும். சிறிது நீர் சேர்க்கவும் கரம் மசாலா தூள் சேர்க்கவும் நன்கு கலக்கவும். 
பின்பு அதனுடன் மட்டன் துண்டுகளை சேர்க்கவும் நன்கு கலக்கவும் அதனை மூடி 4 மணி நேரம் தனியே வைக்கவும்.  பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும் மட்டன் துண்டுகளை அதில் போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.  
மட்டன் பாதி வெந்து விட்டது. பின்பு மட்டனை திருப்பி போட்டு 12 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மட்டன் சாப்ஸ் ரெடி !
Tags: