சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி?





சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி?

அசைவ உணவில் பலருக்கும் பிடித்த உணவாக ஆட்டிறைச்சி உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி?
ஆட்டின் மூளையானது அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது. 

ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்கிறது. 
ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.

ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது. 

பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - 300 கிராம்

இஞ்சி விழுது - 30 கிராம்

பூண்டு விழுது - 30 கிராம்

பச்சை மிளகாய் - 6

தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) - 200 மில்லி

தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) - 100 மில்லி

மஞ்சள்தூள் - 5 கிராம்

எலுமிச்சைப்பழம் - 1

கறிவேப்பிலை - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவைக்கு

பட்டை - 10 கிராம்

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி?
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும் எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.

ஆட்டுக்கறி சமநிலைக்கு வந்ததும், குக்கரில் போட்டு 6 விசில் போட்டு இறக்கி ஆற விடவும். கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி,
கண்கள் எதுக்கு அடிக்கடி துடிப்பது ஏன்?
இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும். பின்னர் குக்கரில் வேக வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும். லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).

சுவையான மட்டன் சொதி ரெடி. அதை இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
Tags: