தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 1/2 கிலோ
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 4
சீரகம், மிளகு, சோம்பு - தலா 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - சிறிது
வத்தல் மிளகாய் - 6
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 2 முழுதாக
பச்சை மிளகாய் - 4 கீறியது
தேங்காய் துருவல் - 2 பத்தை
செய்முறை:
கறியை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் நான்கு துண்டுகளாக அரிந்து எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணைய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலாவைப் போடவும்.
பிறகு தக்காளி, வெங்காய விழுதைச் சேர்க்கவும்.
இதில் கறியை போட்டு தேவைப்பட்டால் மிளகாய் பொடியை போட்டு, தேவை யான அளவு உப்பு சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி விட்டு
அடுப்பில் மிதமான நெருப்பில் அரை மணி நேரம் வேக வைக்கவும். தேங்காயை மைய அரைத்து கறி வெந்ததும் சேர்த்து இறக்கவும்.