தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
ஸ்வீட்டன்ட் காண்டன்ஸ்டு மில்க் – 100 கிராம்
குங்குமப் பூ – சிறிதளவு
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
பிங்க் ஃபுட் கலர் – சில துளிகள்
கியூரா எசென்ஸ் – சில துளிகள்
செய்முறை
பன்னீர் – 200 கிராம்
ஸ்வீட்டன்ட் காண்டன்ஸ்டு மில்க் – 100 கிராம்
குங்குமப் பூ – சிறிதளவு
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
பிங்க் ஃபுட் கலர் – சில துளிகள்
கியூரா எசென்ஸ் – சில துளிகள்
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பன்னீரை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் காண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளவும்
பின்பு பிங்க் ஃபுட் கலர் சேர்க்கவும்.
பின்பு அதனை மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
அதனை ஒரு நான்ஸ்டிக் பானில் விடவும்.
அது சிறிது கெட்டியாகும் வரை கிளறி வேக வைக்கவும்
கெட்டியானதும்
அதனை ஒரு தட்டில் வைக்கவும்
பின்பு அதனுடன் கியூரா எசென்ஸ் சேர்க்கவும்
பின்பு ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு அதில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
பின்பு அதன் மேல் விரும்பினால் குங்குமப் பூ வைத்துக் கொள்ளலாம். சுவையான பன்னீர் லட்டு ரெடி