பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பாலக் மிகவும் நன்மை பயக்கும். அதாவது, உங்கள் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் சமமாக உள்ளது. பால் சாப்பிடக் கூடாது.
இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் தங்கள் உணவில் பாலக்கை உட்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பலாக் கீரை பிடிக்கவில்லை என்றால் அதன் சாறும் அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தேவையான பொருள்கள் : .
பெரிய உருளைக் கிழங்கு - 2 (வேக வைத்து உரித்து மசித்தது),
பாலக்கீரை - 1 கப் (வேக வைத்து அரைத்தது),
கோதுமை மாவு - 3 கப்,
துருவிய சீஸ் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
கொத்த மல்லித்தழை - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை : -
கோதுமை மாவு, பாலக்கீரை விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் அனைத்தும் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை 10-12 சரிசம அளவு உருண்டைகளாக பிரித்து, வட்டமான சப்பாத்தி களாக இட்டு வைக்கவும். வேக வைத்த உருளைக் கிழங்குடன், உப்பு, பச்சைமிளகாய்,
மல்லித் தழை, துருவிய சீஸ் ஒன்றாக சேர்த்து கலந்து, பரத்திய சப்பாத்தியின் மேல் 1 1/2 டேபிள் ஸ்பூன் அளவு கலவையை நடுவில் வைக்கவும்.
சப்பாத்தியின் ஓரங்களை நடுபாகத்து க்கு ஒன்று சேர்த்து உருளைக் கிழங்கு கலவை மூடும் அளவிற்கு கொண்டு வந்து, மேலேயுள்ள மீதி சப்பாத்தி மாவை கிள்ளி எடுக்கவும்.
உருண்டையாக உருட்டி கோதுமை மாவு தூவி வட்டமாக சப்பாத்திகளாக, உருளைக் கிழங்கு கலவை வெளியே வராத அளவுக்கு பரத்தி எடுக்கவும்.
சப்பாத்தி கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக தயிர், ஊறுகாய் அல்லது காய்கறி குழம்புடன் பரிமாறவும்.