தேவையான பொருள்கள் : -
மைதா மாவு - 1/4 கப்,
உதிர்த்த பனீர் - 1 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 1,
கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பொரிக்க எண்ணெய்,
தண்ணீர் - 1/2 கப்,
பொரிக்காத அப்பளம் நொறுக்கியது - 1 கப்,
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : -
பனீர், மிளகாய் தூள், தக்காளி சாஸ், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லித்தழை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, சரிசம உருண்டைகளாக பிரித்து வைக்கவும்.
தண்ணீர், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
உருட்டி வைத்த பனீர் உருண்டைகளை கலக்கிய மாவில் தோய்த்தெடுத்து, நொறுக்கிய பொரிக்காத அப்பளத்தின் மேல் புரட்டி எடுக்கவும்.
எண்ணெயை சூடாக்கி பப்பட் ஃபிளட்டர்ஸை பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.