சுவையான மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?





சுவையான மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?

ஹாலோஃபில்ஸ் என்று அழைக்கப்படும் உப்பில் செழித்து வளரும் சில நுண்ணுயிரிகளைத் தவிர, அதிகளவு உப்பு கிட்டத்தட்ட தேவையான எல்லா நுண்ணுயிரிகளையும் நச்சுத்தன்மையடையச் செய்யும்.
சுவையான மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?
அதனால் தான் உணவைப் பாதுகாக்கவும், தேவையற்ற பாக்டீரியாவைத் தடுக்கவும் மக்கள் நீண்ட காலமாக உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நவீன உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. 
ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லி கிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. சோடியம் ரத்த அழுத்தத்தைத் தவிர மற்ற உடல்நல பிரச்னைகளுடனும் தொடர்புடையது.

அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் மலத்தில் அதிகளவு சோடியம் ஆகியவை வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை ஆகும். இதில், ரத்த சர்க்கரை, கல்லீரல் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.

தினமும் அதிகப்படியாக எடுக்கும் ஒவ்வொரு கிராம் சோடியமும், உடல் பருமன் ஏற்படுவதற்கான அபாயத்தை 15 சதவிகிதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்

உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

எள் - கொஞ்சம்

பெருங்காயப்பொடி - 1/4 டீ ஸ்பூன்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க
பெண்களின் அணிகலங்களின் பயன்கள் !
செய்முறை :
மொறு மொறு உப்பு சீடை செய்வது எப்படி?
முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு உலர்த்தி வைக்கவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். 
அரிசி காய்ந்ததும், மிக்சியில் அல்லது மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். எள்ளை சுத்தம் செய்து வைக்கவும். 

ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு, வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.

வெண்ணெய் நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டியாக). 

ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணெய் தடவிய தட்டில் சின்ன சின்னதாக ‘சீடை’ யாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும். 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 
‘கரகர’ ப்பான ‘மொறு மொறு’ ப்பான ‘உப்பு சீடை’ ரெடி. குறிப்பு: இதில் துளி கல், மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். 
ரொம்ப ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய பக்ஷணம் இது. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.
Tags: