காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அவை பீட்டா-குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது.
அனைத்து வகையான காளான்களும் உண்ணக்கூடிய காளான் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. காளான்களின் விஷக் காளான்களும் இருக்கின்றன. எனவே, காளான் வாங்கும் போது கவனம் தேவை.
காளான்கள் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் அடைப்பை சரி செய்கிறது. இதனால், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது.
தேவையான பொருள்கள் : -
வெண்ணெய் - 20 கிராம்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
ஒரிகானோ, பேசில் இலைகள் - 1/4 டீஸ்பூன் (இதற்கு பதில் நறுக்கிய துளசியை உபயோகிக்கலாம்),
ரவை - 1 கப்,
தண்ணீர் - 2 1/2 கப்,
உப்பு, மிளகு - தேவைக்கு,
துருவிய சீஸ் - 50 கிராம்,
எண்ணெய் -50 மி.லி.
கேக்கிற்கு...
காளானிற்கு...
காளான் - 1 பாக்கெட்,
வெண்ணெய் - 20 கிராம்,
நறுக்கிய வெங்காயம் - 1,
கொத்த மல்லித் தழை - சிறிது,
நசுக்கிய பூண்டு - 3 பல்,
ஃப்ரெஷ் கிரீம் - 1/4 கப்,
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
பால் - 1 கப், ஒரிகானோ,
பேசில் இலை - சிறிது (இல்லை யெனில் துளசி இலை),
உப்பு, மிளகு, கரகரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் - தேவைக்கு.
நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் !
செய்முறை : -
கேக்கிற்கு...
வெண்ணெயை சூடாக்கி வெங்காயம், பூண்டு நிறம் மாறாமல் வதக்கவும். ஒரிகானோ, பேசில், உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்புமாவுக்கு ரவை சேர்ப்பது போல் ரவையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
வேகவைத்த ரவை கலவையை சதுரங் களாக வெட்டி தோசைக் கல்லில் பொன்னிற மாக முறுகலாக எண்ணெய் விட்டு வறுத் தெடுக்கவும்.
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !
காளானிற்கு...
வெண்ணெயை சூடாக்கி வெங்காயம், பூண்டு, காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
பாலும், கிரீமும் சேர்த்து இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் . உப்பு, மிளகு, மிளகாய் தூள், ஒரிகானோ, பேசில் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்கவும்.
ரவை கேக்கின் மேல் காளான் கலவை 1 டீஸ்பூன் வைத்து கொத்த மல்லித் தழை தூவி பரிமாறவும்.
பாலும், கிரீமும் சேர்த்து இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் . உப்பு, மிளகு, மிளகாய் தூள், ஒரிகானோ, பேசில் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்கவும்.
ரவை கேக்கின் மேல் காளான் கலவை 1 டீஸ்பூன் வைத்து கொத்த மல்லித் தழை தூவி பரிமாறவும்.