சுவையான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி?





சுவையான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
சுவையான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி?
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. 

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 
மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். 
சரி இனி மீன் பயன்படுத்தி சுவையான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருள்கள் :

மீன் - அரை கிலோ

எண்ணெய் -அரை கப்

கடுகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்

பெருங்காயம் - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

தக்காளி - 1

மல்லி தூள் - 2 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு
கடலில் குதித்து நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க வீரர் !
செய்முறை
ஆந்திரா மீன் குழம்பு
மீனை நன்கு கழவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.

தக்காளி யை மசித்து அதனு்டன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 
வாய்ப்புண் ஏற்பட காரணமும், தடுக்கும் முறையும் !
பின்பு நறுக்கி வைத்து ள்ள மீன் துண்டு களை மசாலா கலவை யுடன் சேர்த்து கலக்கவும். அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும்.

வெந்த பின் சிறிது கறிவேப் பிலை தூவி இறக்கவும். இந்த மீன் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும். சுவை சூப்பராக இருக்கும்.
Tags: