நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உடலில் ரத்தம் உறையாமல் இருக்கவும், பெரிதும் உதவுவது இந்த ஒமேகா 3 அமிலம் தான்.
முக்கியமாக, மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப் படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
அந்த அளவுக்கு ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள மீன்களில் வவ்வாலும் ஒன்று. வவ்வால் மீன்களில் 20-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன்கள் உண்டு என்றாலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து வகை வவ்வால் மீன்களிலுமே ஒரே மாதிரி கிடைக்கின்றன.
வவ்வால் மீன்களில், குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. வைட்டமின் A, B1., D, B12 போன்றவை நிறைந்துள்ளன. கொழுப்பு அமிலங்கள் இதில் அதிக முள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது.
அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வவ்வால் மீன் நன்மை தரக்கூடியதே. சரி இனி வெளவால் மீன் பயன்படுத்தி அருமையான வெளவால் மீன் பிரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருள்கள் :
வெளவால் மீன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
லெமன் - அரை மூடி
அஜினமோட்டா - சிறிதளவு
நீங்கள் ஏழு நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற?
செய்முறை :
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகாய் தூள் உப்பு, மஞ்சள் தூள், லெமன் சாறு, அஜின மோட்டா அனைத்தையும் சிறிது தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து அந்த கலவை யை மீன் மேல் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மீனை போட்டு இரண்டு பக்க மும் திருப்பி போட்டு வேக வைத்து நன்கு சிவந்தவுடன் எடுக்கவும். சூப்பரான மீன் பிரை ரெடி.
குறிப்பு :
கேரளாவில் வவ்வால் மீன் பொழிச்சது ரொம்ப பேமஸ்.. இதற்காகவே, கடைகளில் வவ்வால் மீன் வாங்கும்போதே, மீன்களின் நடுவில் கீறி விட்டு வாங்கி கொள்வார்கள்.