வஞ்சிரம் கருவாடு தொக்கு செய்வது எப்படி?





வஞ்சிரம் கருவாடு தொக்கு செய்வது எப்படி?

வஞ்சிர மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் A, D, B6, B12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த மீனிலிருக்கும் வைட்டமின் A சத்தானது, ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் தீர்த்து வைக்கிறது.
வஞ்சிரம் கருவாடு தொக்கு
அத்துடன், B12 நிறைந்த இந்த வஞ்சிர மீன், ஆரோக்கியமான நரம்பு மற்றும் ரத்த அணுக்களை பராமரிக்க உறுதுணையாகிறது. வஞ்சிர மீனை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சீராக செயல்படுகிறது. 
நுரையீரல் பலம் பெறுகிறது. அவ்வளவு ஏன்? சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த வஞ்சிரம் மீன் சிறந்த மருந்தாகும். வஞ்சரம் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. 

இந்த 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகின்றன. முக்கியமாக அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது. 

பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இந்த மீன் திகழ்வதால், எலும்புகள், பற்கள், தசைகளுக்கு ஆரோக்கியமாக உதவுகின்றன. 

உடலில் சரியான திரவ சமநிலையை பராமரிக்கவும் வஞ்சிர மீன் உதவுகிறது. நல்ல வகையான கொழுப்புகளும் உள்ளதே இந்த வஞ்சிர மீனின் தனித்துவமான ருசிக்கு காரணமாகிறது. 
கிரில்லிங் அல்லது ஸ்டீமிங் முறையில் வஞ்சிர மீனை சமைத்தால், கூடுதல் ஆரோக்கியமானது. வஞ்சரம் மீனில் கலோரிகள் குறைவு, புரதச்சத்து அதிகம் என்பதால், உடல் எடை குறைய விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆகும். 

மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !

மீனின் அளவு மற்றும் அது தயாரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து வஞ்சரத்தின் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும் என்றாலும், சத்தான உணவாகவே வஞ்சிரம் கருதப்படுகிறது.

தேவையான பொருள்கள்

வஞ்சிரம் கருவாடு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

நல்லெண'ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை
கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !

நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி தேவையான உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள கருவாடு போட்டு வதக்கி 1 டம்ளர் தணணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்.
Tags: