பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கி யுள்ளன.
தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும்.
மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது.
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.
வீட்டில் இதுவரை மீன் குழம்பு, மீன் ஃப்ரை என்று செய்திருப்போம். அந்த மீனில் கொஞ்சம் வெரைட்டியா ஈஸியா செய்வதுன்னா அது ஃபிங்கர் பிஷ். அந்த ஃபிங்கர் பிஷ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா !
தேவையான பொருட்கள் :
நெய் மீன் - 5 துண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சாட் மசாலா - கால் ஸ்பூன்
சீரக தூள் - கால் ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் - கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
கேசரி பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவையான அளவு
ஆயில் - பொரிக்க தேவையான அளவு
ஈஸ்ட் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் !
செய்முறை :
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு மீனில் உள்ள முட்களை எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
பிறகு உதிர்த்த அந்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
பின்னர் கார்ன் ப்ளார், மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, மிளகு தூள், சாட் மசாலா, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, சோயா சாஸ்,
எலுமிச்சை சாறு, கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின் உருட்டிய மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.