பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.
தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும்.
மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். கபாப்களுக்கென்று ஒரு தினம் கொண்டாடப் படுகிறது என்றால் அதன் பாரம்பரியத்தையும், அதன் மீது உள்ள ஈர்ப்பையும் நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.
ஆண்டுதோறும் ஜூலை 14 அன்று இந்த கபாப் தினம் கொண்டாடப் படுகிறது. முகலாய உணவான இதற்கு இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில் தான் ரசிகர்கள் அதிகம்.
அதற்கு காரணம் இந்த உணவின், இறைச்சியும், மசாலாவும் சேரும் அந்த சூட்சுமம் தான். நமது தேசத்தின் கலாச்சார பன்முகத் தன்மையை நினைவு கூறவும், கபாப்களை சுவைப்பதற்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
பலர் இந்த நாளில் ருசியான கபாப்களை வீட்டிலேயே செய்து உண்டு இந்த நாளை கொண்டாடுவார்கள். பிரத்யேகமாக சுவையான கூனி மீன் கபாப் ரெசிபி செய்வது கபாபை விரும்பும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருள்கள் :
கூனி மீன் - 300 கிராம்.
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.
வெங்காயம் - 200 கிராம்.
உப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
பூண்டு - 1 ஸ்பூன்.
செய்முறை:
செய்முறை:
கூனி மீனைச் சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் மற்றும் மசால் சாமான் களில் புரட்டிக் கொள்ளவும். கபாப் குச்சிகளில் கூனி மீனைக் குத்தி, மீனின் இரு புறமும் உரித்த முழு வெங்காயத்தை குத்தி,
சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?
எலுமிச்சைச் சாறில் ஊற வைத்து பின் மீனை பேக்கிங் அடுப்பில் வேக வைத்தோ, அல்லது எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.