சுவையான அன்னாசிப்பழ கேசரி செய்வது எப்படி?





சுவையான அன்னாசிப்பழ கேசரி செய்வது எப்படி?

நவராத்திரி தொடங்கி விட்டது. பெங்காலி வீடுகளில் மஹா ஸப்தமி அன்று போடோன் எனப்படும் சிலை திறப்புடன் துவங்கும் துர்கா பூஜையை அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
துர்கா பூஜை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகை. குறிப்பாக மேற்கு வங்கத்தில் துர்கையை மக்கள் ஆட்டம் பாட்டத்துடனும் முழு அர்ப்பணிப் புடனும் வழிபடுவர்.
நவராத்திரி துர்கா பூஜா ஸ்பெஷல் : 

அன்னாசிப்பழ கேசரி இது வெறும் பண்டிகை மட்டுமல்ல அறுசுவை விருந்து, ஆடை ஆபரணங்கள், அலங்காரம், விளக்குகள் மற்றும் பல சிறப்பு களைக் கொண்ட ஒரு திருவிழா வாகும். 

உணவு என்று வரும்போது இது போன்ற திருவிழாக்கள் தான் ருசிபார்க்க சரியான தருணம். விஜயதசமி அன்று 

உங்கள் சுற்றத் தாரை வரவழைத்து அவர்களுக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இந்த முறை அன்னாசிப் பழ கேசரியை நீங்கள் ஏன் முயன்று பார்க்கக் கூடாது?

உங்களுக்கு கேசரி செய்யத் தெரியுமென்றால் அன்னாசிப் பழத்தின் நறுமணம் அதற்கு கூடுதல் சிறப்பை வழங்கும். நீங்கள் சாக்லேட் கேசரி அல்லது வாழைப்பழ கேசரியையும் கூட இதே முறையில் செய்யலாம்.
உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு செய்வது எப்படி?
இன்று அன்னாசிப்பழ கேசரி செய்யும் முறைகள் மற்றும் தேவையான பொருட்கள் குறித்து குறிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:

அன்னாசிப் பழம் : ஒரு கப்

நெய் : 1 மேஜைக் கரண்டி

சர்க்கரை : 1 மேஜைக் கரண்டி

கொழுப்பு குறைந்த பால்: 1 கப்

செமொலினா : 1 கப்

இனிப்பூட்டி (சர்க்கரை க்கு பதிலாக): 3 மேஜைக் கரண்டி

ஏலக்காய் தூள் : 1 தேக்கரண்டி

குங்குமப்பூ : சிறிதளவு
செய்முறை :
ஒரு ஆழமான வாணலி யில் அன்னாசிப் பழக் கூழைப் போட்டு அதனுடன் சர்க்கரை அல்லது இனிப் பூட்டியை சேர்த்துக் கலக்கவும். இதை 3-4 நிமிட ங்கள் கொதிக்க விடவும். செமொலினாவை நெய் விட்டு மிதமான சூட்டில் இளம் சிவப்பாக மாறும் வரை வறுக்கவும். 

அவ்வாறு மாற நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையுடன் செய்யவும். இப்போது அதில் பால் சேர்த்து நீர் விட்டு நன்றாக கிளறவும். இல்லை யென்றால் கட்டியாக ஆகிவிடும்.

இந்த கலவை கெட்டிப்பட்டவுடன் இதில் இனிப்பூட்டியைச் சேர்த்து வறன்டு போகும் வரை கிளறவும். இதனுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள அன்னாசிப்பழக் கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். 
இதில் பாலில் ஊறவைத்த குங்குமப் பூவையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து இரண்டு நிமிடம் சூட்டில் வைத்துக் கிளறவும். உங்கள் அன்னாசிப்பழ கேசரி தயார். 

இதனை கண்ணாடிக் கிண்ணத்தில் போட்டு மூடியைக் கொண்டு மூடி தலை கீழாக மெதுவாக திருப்பி னால் ஒரு வித்தியாச மான வடிவில் கிடைக்கும். இதனை உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புகள் கொண்டு அலங்கரிக்கலாம்.
Tags: