எளிமையான தக்காளி சாம்பார் செய்வது எப்படி?





எளிமையான தக்காளி சாம்பார் செய்வது எப்படி?

தக்காளி தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்டது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே தக்காளி முக்கியமான காய்கறியாக மாறியுள்ளது. முக்கியமாக இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறியாக தக்காளி உள்ளது. 
தக்காளி சாம்பார்
தக்காளியை கொண்டு சாலட், பழச்சாறுகள் மற்றும் சூப்கள் போன்றவற்றை செய்கின்றனர். தக்காளியில் வைட்டமின் ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7 மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

மேலும் கூடுதலாக இதில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. எனவே தக்காளியை உட்கொள்வது மூலம் நாம் பல வகையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும். 
தக்காளியில் உள்ள லைகோபீன் ஆனது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. 

சமைத்த தக்காளியானது உடலில் லைக்கோபீன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே சமைத்த தக்காளியானது பச்சை தக்காளியை விடவும் அதிக பயனளிக்கிறது. 

தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. 

மேலும் இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. நமது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த இது உதவுகிறது. இரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய வைட்டமின் கேயானது தக்காளியில் அதிகமாக உள்ளது. எனவே தக்காளி ஒரு மல்டி வைட்டமின் உணவு என கூறலாம்.

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள்.

மாவு சத்து மிக்க ஆலூ பரோத்தா செய்வது எப்படி?

இங்கு எளிமை யான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வ தென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்.

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு / துவரம் பருப்பு - 1/2 கப்

தக்காளி - 2 (நறுக் கியது)

பச்சை மிளகாய் - 2

தண்ணீர் - 2 கப் + தேவை யான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள்-1/4 டீஸ்பூன்
பெண்கள் ஏன் பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?
செய்முறை:
முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். 

பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!
Tags: