தேவையான பொருள்கள் :
பீட்ரூட் - 1 கப்
தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் பீட்ரூடை தோல் சீவி துருவி வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
இப்போது பீட்ரூட் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் சர்க்கரை சேர்த்து கெட்டி யாகும் வரை கிளற வேண்டும்.
அவற் றில் இருந்து நெய் பிரிந்த பின் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி கலவை யை அதில் போட்டு சிறு துண்டு களாக வெட்டி பரிமாறவும்.