பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும்.
இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது. அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
சரி இனி பீட்ரூட் பயன்படுத்தி டேஸ்டியான பீட்ரூட் அல்வா செய்வது செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை . :
பீட்ரூட் - அரை கிலோ (துருவிக் கொள்ளவும்)
சர்க்கரை - ஒன்றரை கப்
பால்கோவா (இனிப்பு சேர்த்தது) - 200 கிராம்
ஏலக்காய் - 4 (பொடித்தது)
முந்திரி - 10
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை . :
நெய்யை ரைஸ் குக்கர் பாத்தி ரத்தில் தட்டி ல்லாமல் சேர்த்து, அதில் முந்திரித் துண்டு களைச் சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும்.
கீப் வார்முக்கு வந்ததும், துருவிய பீட்ரூட், ஏலக்காய் சேர்த்துக் கலந்து குக் மோடில் மூடிப் போட்டு 5-7 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிளறி விட்டு சர்க்கரை சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும்.
கலவை வெந்து, கீப் வார்ம் மோடுக்கு வந்ததும், உதிர்த்த பால்கோவா வைச் சேர்த்துக் கிளறி மறுபடியும் குக் மோடில் போட்டு மூடவும். மறுபடியும் கீப் வார்ம் மோடுக்கு வந்தவுடன், கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி, அலங் கரித்துப் பரிமாறவும்.
கலவை வெந்து, கீப் வார்ம் மோடுக்கு வந்ததும், உதிர்த்த பால்கோவா வைச் சேர்த்துக் கிளறி மறுபடியும் குக் மோடில் போட்டு மூடவும். மறுபடியும் கீப் வார்ம் மோடுக்கு வந்தவுடன், கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி, அலங் கரித்துப் பரிமாறவும்.
அதிலேயே விட்டால் கெட்டிப் பட்டு விடும். இதனால் கண்டிப்பாக வேறு ஒரு பாத்திரத்துக்கு உடனடியாக மாற்றி விடவும்.