தேவையான பொருள்கள் :
கடலை மாவு - 1 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
துருவிய சாக்லெட் - 1/2 கப் அல்லது சாக்லெட் சிப்ஸ்,
நெய் - 1/4 கிலோ, பால் - 1 கப்.
செய்முறை :
கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு கடலை மாவு, கோதுமை மாவை தனித் தனியாக வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
பின் ஆறியதும் பால் தெளித்து பிசறி மூடி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் மீண்டும் பால் தெளித்து மூடி வைக் கவும்.
கடாயில் நெய் விட்டு மாவை கை விடாமல் நெய்யில் 15 நிமிடம் நன்கு கிளறி இறக்கி, ஒரு பாத்தி ரத்தில் போட்டு ஆறவிடவும். இத்துடன் துருவிய சாக்லெட்டை சேர்த்து கலக்கவும்.
மற்றொரு கடாயில் சர்க்கரை பாகு காய்ச்சி, பிசுபிசுப் பாக பாகுபதம் வந்ததும், இதை மாவில் ஊற்றி கலந்து, கையில் நெய் தடவிக் கொண்டு சிறு சிறு லட்டுக ளாகப் பிடி க்கவும். ஸ்ரீவிநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் பிரசாதம் இது!