தேவையான பொருட்கள்:
கோன் செய்ய...
மைதா - 200 கிராம்,
ரவை - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்,
தண்ணீர், நெய் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
உள்ளே ஸ்டஃப்பிங் செய்ய...
பொடியாக நறுக்கிய பழக்கலவை - தேவையான அளவு.
செய்முறை:
மைதாவில் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரிக்குப் பிசைவது போலப் பிசையவும். பிறகு மேலே ரவையைத் தூவி மறுபடி பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, நீளமான பட்டைகளாக வெட்டவும்.
பாத்திரக் கடைகளில் அலுமினிய கோன்கள் கிடைக்கும். அந்த கோன் மேல் மைதா பட்டைகளை சுற்றிக்கொண்டே வரவும்.
எண்ணெய் காய வைத்து, அதில் கோன்களை போட்டால், கோன் தனியே வரும். மைதா கோன் பொரிந்ததும், அதை எடுத்துத் தனியே வைக்கவும்.
வீட்டிலுள்ள பழங்களைக் குளிர வைத்து, ஒவ்வொரு கோனின் உள்ளேயும் நிரப்பி, தேவைப்பட்டால் மேலே சிறிது ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும். குட்டீஸ் விரும்பிச் சாப்பிடுவார்கள்.