மக்கன் பேடா செய்வது | Makkan Peda !





மக்கன் பேடா செய்வது | Makkan Peda !

தேவையான பொருள்கள் :

ஜாமூன் மிக்ஸ் - 1 கப்,

நட்ஸ் கலவை - 3 டேபிள் ஸ்பூன்,

பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,

உப்பு - ஒரு சிட்டிகை,

பால் அல்லது தண்ணீர் - 4-5 டேபிள் ஸ்பூன்,

பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

பாகிற்கு...

சர்க்கரை - 1-1/2 கப்,

தண்ணீர் - 2 கப்.

செய்முறை : 
மக்கன் பேடா
சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒட்டும் பதம் வரும் வரை கொதிக்க விடவும். ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் அல்லது பால் சேர்த்து மாவாக பிசைந்து 5-10 நிமிடம் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்த நட்ஸ் பருப்பு களை பூரணமாக வைத்து மாவை இழுத்து மூடி, சூடான எண்ணெ யில் பொன்னிற மாக பொரித் தெடுக்கவும். 

இவற்றை சர்க்கரை பாகில் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து மேேல வெனிலா ஐஸ் கிரீம் வைத்து பரிமாற வும்.
Tags: