இனிப்பான மங்களூர் போண்டா செய்வது எப்படி?





இனிப்பான மங்களூர் போண்டா செய்வது எப்படி?

நம்மைச் சுற்றி செய்கின்ற பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது. ஏன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான். 
 இனிப்பான மங்களூர் போண்டா செய்வது எப்படி?
நிறைய பேர் ஹோட்டலுக்கு போனால் கூட புரோட்டோ தான் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இப்படி எல்லா வகை உணவுகளிலும் மைதா மாவு என்பது அவசியமாக விட்டது. 

உண்மையில் இந்த மைதா மாவினால் ஆன பொருட்களை நாம் வாங்கி சாப்பிடலாமா, இதனால் நமக்கு நன்மையா இல்லை தீமையா இது போன்ற கேள்விகள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
உண்மையச் சொல்லப்போனால் மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் பெறப்படுகிறது. நன்றாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் இருக்கும். 

இந்த கோதுமை மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற ரசாயன பொருளை கலந்து மாவை வெண்மையாக்கி விடுகின்றனர். 

இது தவிர மாவை மிருதுவாக்க ஒரு ரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டுகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை சத்து என ஏராளமான பொருட்களையும் சேர்த்து தானெ மைதா மாவை தயாரிக்கின்றனர். 

எனவே இந்த மாவில் ஒரு சத்தும் கிடையாது எல்லாமே ரசாயனம் தான் என்கிறார்கள். இதை சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று அழைக்கின்றனர். 

நாம் சாப்பிடும் ரொட்டி, கேக்குகள், பீட்சா, பர்கர்கள், நூடுல்ஸ் போன்ற எல்லா உணவுகளையும் மைதா மாவு கொண்டு தான் செய்கிறார்கள். 

இந்த மைதா மாவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நமக்கு ஆரோக்கிய கேடு தான் மிச்சம் என்கிறார்கள் மருத்துவர்கள். கர்நாடகத்தில் ஒருசில ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. 

அதில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்றவை குறிப்பிடத் தக்கவை. இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வ தென்று கொடுக்கப் பட்டுள்ளது.
அவற்றைப் படித்து பார்த்து, மாலையில் குழந்தை களுக்கு செய்து கொடுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

மைதா - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

தயிர் - 1 1/2 கப்

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக் களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!
Tags: