டோக்ளா செய்வது | Tokla !





டோக்ளா செய்வது | Tokla !

தேவையானவை:

கடலை மாவு - ஒன்றரை கப்

இஞ்சி - 2 செமீ

உப்பு - ஒரு டீஸ்பூன்

ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்

சிட்ரிக் ஆஸிட் - முக்கால் டீஸ்பூன் அல்லது எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு, சீரகம், வெள்ளை எள் தலா - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகா யை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஆப்ப சோடாவைத் தவிர, தேவையான வற்றில் உள்ள மற்ற அனை த்துப் பொருட்க ளையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்து க்குக் கரைத்துக் கொள்ளவும். 
டோக்ளா

இரண்டு கப் தண்ணீ ரை குக்கர் பாத்திர த்தில் ஊற்றிக் கொதிக்க விடவும். பாத்திரத் தின் வாய்ப் பகுதியில் பொருத் துவது போல ஒரு தட்டை எண்ணெய் தடவி, வாய்ப் பகுதியில் வைக்கவும்.
கரைத்த மாவில் ஆப்ப சோடா சேர்த்து ‘புசு புசு’ என்று அடித்து, உடனே பாத்திர த்தின் உள்ள தட்டில் ஊற்றி, குக்கரை மூடி 15 நிமிடம் வேக விடவும். பிறகு திறந்து தட்டை வெளியே எடுக்கவும்.

வாணலி யில் தாளிப்பு க்குக் கொடுத்த பொருட் களைச் சேர்த்துத் தாளித்து, இதனை ஒரு டேபிள் ஸ்பூன் வெதுவெது ப்பான தண் ணீரில் சேர்க்கவும். 

(தண்ணீரை தாளிப்பில் ஊற்றக் கூடாது. கவனமாக இருக்கவும்) தாளித் ததை டோக்ளாவின் மேல் தெளித்து, கொத்த மல்லித் தழை, துருவிய தேங்காய் சேர்த்து அலங்க ரித்துப் பரிமாற வும்.
Tags: