பெரும்பாலான மக்கள் சிக்கனை பயன்படுத்தினாலும், ஆட்டிறைச்சிக்கு தனி சுவை உண்டு. ஆனால், ஆட்டிறைச்சி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது போல பல்வேறு செய்திகள் வெளியாகி, மட்டன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இதன் விளைவாக, மட்டன் பிரியர்கள் சிக்கனுக்கு மாறி வருகிறார்கள். சிலர் ஆட்டிறைச்சியில் எந்த தீங்கும் கிடையாது என்றும் கூறி வருகின்றனர்.ஒரு மட்டனில் சிக்கனை விட குறைவான கலோரிகள், கொழுப்புகள் உள்ளன.
ஆனால், அதிக புரதம் உள்ளது. மட்டனில் இரும்பு மற்றும் பொட்டாசியம் ஊட்டசத்துகள் அதிகம் உள்ளன. சிக்கனை விட குறைவான சோடியம் ஊட்டசத்து உள்ளது.
கோழி இறைச்சியில் சில பகுதிகள் மட்டுமே உடலுக்கு நல்லது. பல பகுதிகளில் கொழுப்பு மட்டுமே உள்ளது. அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அதாவது, கால்கள், இறக்கைகள், தொடைகள், மார்பகப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கொழுப்புகள் அதிகம். எப்போதும் மார்பகப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பசி எடுக்காது என்று சொல்வது தவறானது. இருப்பினும் அதிகப்படியான அளவில் சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்தார்.
கோழி இறைச்சியிலும் தீங்கு கிடையாது, மார்பகப் பகுதிகளை சாப்பிடுவது நல்லது. சரி இனி சுவையான சிக்கன் சமோசா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
வெங்காயம் - 250 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கிராம்பு - 6
மைதா - 350 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
மிக்ஸ்டு வெஜ் பரோட்டா செய்வது எப்படி?
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்து மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்து மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக் கறியை சேர்த்து வதக்கவும்.
கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?
சிக்கன் வெந்ததும் உப்பு, கரம் மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டை களாக பிடித்து வட்ட மாக தேய்த்து கொள்ளவும்.
வட்டங் களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் மூடவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித் தெடுக்கவும். சுவையான சிக்கன் சமோசா ரெடி.