அருமையான வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி?





அருமையான வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி?

வேர்க்கடலை உண்மையில் பீன்ஸ், பயறு மற்றும் சோயா போன்ற பயிர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பருப்பு வகைகள். வேர்க்கடலை பெரும்பாலான வர்களுக்குப் பிடித்த ஸ்நாக் என்று சொல்லலாம். 
வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி?
தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்து விடும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 
இந்த கொட்டைகள் பீட்டா சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்று நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்து விடும். 

வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளது. 

ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன.

சரி இனி வேர்க்கடலை கொண்டு சுவையான வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

நெய் - 1 ஸ்பூன்
ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?
செய்முறை :
வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி?
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத் தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். இதனிடையே வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். 

வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க  விடவும். பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். 

சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வர வேண்டும். இது தான் சரியான பதம். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். 
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை !
அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க் கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடுங்கள்.
Tags: