தேவையான பொருட்கள் :
ஸ்வீட் கார்ன் - ஒரு கிண்ணம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
கொத்து மல்லித் தழை - சிறிது
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - கால் தேக்கரண்டி
ஓமப் பொடி - சிறிது
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்து மல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஸ்வீட் கார்னை அரை வேக் காட்டில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலி யை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் அதில் உதிர்த்து வைத்து ள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அதனுடன் சாட் மசாலா வைச் சேர்த்து கிளறி இறக்கி, நறுக்கி வைத் துள்ள வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, ஓமப்பொடி, கொத்து மல்லித் தூவிப் பரிமாறவும்.
சத்தான சுவை யான மசாலா ஸ்வீட் கார்ன் ரெடி.