ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள தக்காளியை ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சமையலில் அது கொடுக்கும் மனமும், புளிப்புச் சுவையும் அலாதியானது.
அது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் நிரம்பியுள்ளன. இத்தகைய தக்காளியை தினசரி சாப்பிடுவதால் அல்லது அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கவனிக்க வேண்டியுள்ளது.
இது குறித்து ஹைதராபாதைச் சேர்ந்த மூத்த மருத்துவர் சோம்நாத் குப்தா கூறுகையில், தக்காளியில் விட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
குறிப்பாக லிகோபைன் என்னும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்தானது நம் இதய நலனை மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும்’’ என்று தெரிவித்தார்.
தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதே போல பொட்டாசியம் சத்தும் உள்ளது. விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது.
விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
தக்காளியில் நிறைவான நீர்ச்சத்தும், குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும்.
அது மட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி கட்டுப்படுத்தப் படுகிறது. காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த ரெசிபியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு இந்த மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.
இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், மிகவும் சுவையுடன் இருக்கும். இப்போது அந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 2
கடலைமாவு - கால் கப்
உப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
தக்காளி பழம்
கொத்துமல்லி
சிறிது தயிர்
பேக்கிங் சோடா - சிறிது
செய்முறை
தக்காளி பழங்களை பெரிய பெரிய துண்டு களாக வெட்ட வேண்டும். கடலை மாவு, உப்பு, மிளகாய், கொத்து மல்லி, சிறிது தயிர், பேக்கிங் சோடா ஆகிய வற்றை சேர்த்து நன்று கலந்து கொள்ளவும்.
அதில் இரண்டு முட்டை களையும் உடைத்து ஊற்றி கிளறவும். தோசைக் கல்லில் தேவையான அளவிற்கு ஊற்றி தோசை போல வேக வைத்து எடுக்கவும்.