பாதாம், பிஸ்தா இரண்டுமே மிகவும் சுவையானது. அது மட்டுமன்றி அது உடலுக்கு ஆரோக்கிய மானதும் கூட. பாதாம் சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
மற்றும் நல்ல வகையான உயர் அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் உள்ளன.
ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான். ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும்.
மேலும், ஊறவைத்த பாதாம், ஆன்டி ஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.
பிஸ்தா நீண்ட காலமாகவே உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து கொண்டிருக்கும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றன. இதில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் கொண்டிருக்கிறது.
பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தருகிறது.
தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.
இன்று பாதாம் பிஸ்தா அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம். இது சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையானவை
பேரீச்சம் பழம் - 1 கப்
திராட்சை - 1 கப்
முந்திரி பருப்பு - 1 கப்
பாதாம் பருப்பு - 1 கப்
பிஸ்தா பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
தண்ணீ ர் - அரை கப்
செய்முறை:
முதலில் சுடுநீரில் பிஸ்தா, பாதாம் பருப்புகளை தோல் நீக்கி ஊற வைத்துக் கொள்ளவும். இதனை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு விதை நீக்கிய பேரீச்சம் பழம், திராட்சை இவற்றையும் அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை தண்ணீ ர் இரண்டையும் பாத்திரத்தில் ஊற்றிப் பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை சூடாக்கவும். அத்தோடு அரைத்த திராட்சை பேரீச்சம் பழக் கலவையைப் போட்டு நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
பின், அரைத்த பொடித்து வைத்துள்ள பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். இவை யாவும் சேர்ந்து வரும் போது நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அல்வா பதம் ஒட்டாமல் வந்ததும் இறக்கி விடவும்.