சுவையான வாழைப்பூ குருமா செய்வது எப்படி? #Kuruma





சுவையான வாழைப்பூ குருமா செய்வது எப்படி? #Kuruma

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
சுவையான வாழைப்பூ குருமா செய்வது எப்படி?

கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

வெள்ளைப் படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல்  கட்டுப்படும்.

வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை  நீங்கும். 
வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம்  குணமாகும். தாது விருத்தியடையும்.

வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை  குணமாகும்.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
தேவையான பொருள்கள்

சிறிய வாழைப்பூ - ஒன்று

வெங்காயம் - முன்று

தக்காளி - மூன்று

பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை - தாளிக்க

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

எண்ணைய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மல்லித் தழை - சிறிதளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 8

தேங்காய் - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

கசகசா - அரை ஸ்பூன்

பூண்டு - ஐந்து பல்

இஞ்சி -சிறு துண்டு

செய்முறை :
வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டி ரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். 
சுவையான வாழைப்பூ குருமா செய்வது எப்படி?
அரைக்க வைத்துள் ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகிய வற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். 
வெங்காயம், தக்காளியை பொடியாக இல்லாமல் சற்று நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள் ளாற்றை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்ததும் வாழைப் பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி மல்லித் தழை தூவவும்.
Tags: