சூப்பரான பட்டர் குக்கீஸ் செய்வது எப்படி?





சூப்பரான பட்டர் குக்கீஸ் செய்வது எப்படி?

பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப்படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும். 
சூப்பரான பட்டர் குக்கீஸ் செய்வது எப்படி?

பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது. 

பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது. 

அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும்.

மோசமான செரிமான மண்டலத்தையும் சரிசெய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.  தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. 

இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். 

இது மிகவும் சுவைாயானது.அது மட்டுமன்றி அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவு ஆகும. சரி இப்போது பட்டர் குக்கீஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் – 1/2 கப்

கோதுமை மா – 1 கப்

பொடித்த சர்க்கரை – 1/2 கப்

பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி

உப்பு – 1 சிட்டிகை

வணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)

பால் – 1 (அ) 2 தேக்கரண்டி (தேவைப்ப‌ட்டால்)

செய்முறை:

முதலில், வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து வெண்ணெய் குழைந்து வந்தால், குக்கீஸ் மெதுவாக வரும்.
ஒரு சல்லடையில், கோதுமை மா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.

இதனை அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையில் போட்டு நன்றாக சேர்த்து பிசையவும். எசன்ஸ் சேர்ப்பதாக இருந்தால், மா பிசையும்போதே சேர்த்து விடவும்.

(மா ரொம்பவும் சேராமல், அங்கங்கே வறண்ட மாதிரி தெரிந்தால், சிறிது பாலை தெளித்து பிசைந்து கொள்ளலாம்.). ஒரு பேக்கிங் ட்ரேயில், அலுமினியம் பேப்பர் விரித்து, தயார் செய்து வைக்கவும். 

பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கிள்ளி, உருண்டைகளாக உருட்டி ட்ரேயில் வைக்கவும். பின்னர், சிறய கரண்டி கொண்டு ஒவ்வொரு உருண்டை யையும் லேசாக அழுத்தி விடவும். 

இதனை, 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, 10 – 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். இப்போது சுவையான க்ரிஸ்ப்பி பட்டர் குக்கீஸ் தயார்!
Tags: