நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன.
செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது.
கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்கு வாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது.
நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது.
காயங்களை ஆற்றும் தன்மை நண்டுகளுக்கு உண்டு. எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவு நண்டினை சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகள் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாம்ல நண்டு சாப்பிடக்கூடாது. விடுமுறையில் அநேக மானோர் வீடுகளில் இருப்பீர்கள்.
ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட வேண்டும் போல இருந்தால் செய்து பாருங்கள் நண்டு பொரியல். இது மிக மிக சுவையானது. சரி இப்போது நண்டு பொரியலை எப்படி செய்வ தென்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
நண்டு சதை -1கப்
வெங்காயம் -2
காய்ந்த மிளகாய் -3
கடுகு -1ஸ்பூன்
பெப்பர் -1ஸ்பூன்
கருவாயிலை -1கொத்து
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் நண்டை உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும்.
இப்போது ரெடிமெட்டாகவே கிடைக் கிறது
அப்படி கிடைக்க வில்லை என்றால் முழு நண்டை வாங்கி நாம் சதையை தனியே எடுத்து கொள்ள லாம்.
சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அதில் வெங்காயம், கறிவேப் பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி யதும் நண்டு சதை யினை அதனுடன் சேர்த்து கிளறவும்.
விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை
நன்கு கிளறி உப்பு சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து விட்டு பின் மூடியினை திறந்து கிளறி விட்டு இறக்கவும். கொஞ்சம் காரம் தேவை யென்றால் பெப்பர் தூவி இறக்கவும்.