கேரளா சிக்கன் வறுவல் செய்வது எப்படி?





கேரளா சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

நாம் சாப்பிடும் இறைச்சி உணவுகளில், பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு, கோழிக்கறி. குறைந்த விலை, குறைந்த கொழுப்பு காரணமாக கோழிக்கறி பிரபலமாகி உள்ளது. 
கேரளா சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
இவை தவிர, ஏராளமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இந்த இறைச்சியில் காணப்படுகின்றன. உடலுக்கு நன்மை செய்யும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் இதில் நிறைந்துள்ளன.

அசைவ பிரியர்கள் பலருக்கு தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் இருக்கும். குறிப்பாக ஜிம் செல்பவர்கள் அடிக்கடி அசைவம் சாப்பிடுவார்கள். 

ஆனால், நம்மில் பலர் தினமும் சிக்கன் சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நம்புகின்றனர். இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. 
ஏனென்றால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சிக்கனில் வைட்டமின் பி 6 நிறைந்திருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கிறது. 

வைட்டமின் பி 6 மாரடைப்பு அபாயத்துடன் இணைக்கப்பட்ட முக்கிய கூறுகளில் ஒன்றான ஹோமோ சைஸ்டீனின் அளவை குறைக்கிறது. இது தவிர, கோழி நியாசினின் சிறந்த மூலம். 

இது இதய நோய்க்கு வழிவகுக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகவும் இருப்பதால் இதயத்திற்கு நல்லது.
சிக்கன் சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சிக்கனில் உள்ள சேர்மங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளின் தேக்கத்தை குறைப்பதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

தேவையான பொருள்கள்

சிக்கன் - அரை கிலோ

சோம்பு - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன் செய்முறை
கேரளா சிக்கன் வறுவல்
முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும். பின்பு மிக்ஸியில் காய்நத மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி
Tags: