சுவையான மாப்பிள்ளை குருமா செய்வது எப்படி? #Kuruma





சுவையான மாப்பிள்ளை குருமா செய்வது எப்படி? #Kuruma

இந்த குருமா செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை, இதில் மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை காரத்திற்கு வெரும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும்

மாப்பிள்ளை குருமா

இதில் கரம் மசாலாவும் சேர்க்க கூடாது அதே மாதிரி தாளிக்க பட்டை + சோம்பு மட்டும் தான் சேர்க்க வேண்டும். அதே மாதிரி, இதில் கடைசியாக கண்டிப்பாக தயிர் சேர்க்க வேண்டும். 

தயிர் சேர்ப்பதால் வித்தியசமாக கூடுதல் சுவையுடன் இருக்கும். தயிருக்கு பதிலாக விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் ஆனால் சுவையில் வித்தியசாம இருக்கும்
நான் இதனை சிக்கனில் செய்து இருக்கின்றேன் விரும்பினால் இதே மாதிரி காய்கள் / மட்டன் சேர்த்து செய்யலாம் மட்டனில் செய்வதாக இருந்தால் முதலில் மட்டனை வேக வைத்து சேர்க்கவும்

ஊர்பக்கம் இந்த குருமாவினை மருவீட்டின் பொழுது மாப்பிள்ளைக்கு செய்து கொடுப்பாங்களாம். நீங்களூம் செய்து பார்த்து விட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ

தயிர் - 1/4 கப்

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேஜை கரண்டி

பொடியாக நறுக்கி கொள்ள :

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

சேர்க்க வேண்டிய தூள் வகை :

மஞ்சள் தூள் - 1/2 தேகரண்டி

தனியா தூள் - 1 தேகரண்டி

உப்பு - தேவையான அளவு

நசுக்கி கொள்ள :

பூண்டு - 5 பல் தோல் நீக்கியது

பட்டை - 1 இன்ச் துண்டு

சோம்பு - 1/2 தேகரண்டி

வறுத்து அரைக்க :

தேங்காய் துண்டுகள் - 2 துண்டுகள் நறுக்கியது

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 3- 4

கசாகசா - 1 தேகரண்டி

பொட்டுக் கடலை - 1 மேஜை கரண்டி
செய்முறை :

வெங்காயம் + தக்காளி யினை நறுக்கி வைக்கவும் பச்சை மிளகாயினை இரண்டாக வெட்டி கொள்ளவும் சிக்கனை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்

மாப்பிள்ளை குருமா செய்வது

நசுக்கி கொள்ள கொடுத்துள்ள பொருட்களை, பூண்டு + பட்டை + சோம்பு சேர்த்து நசுக்கி வைக்கவும். அதே மாதிரி, வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில், தேங்காய் + இஞ்சி + பச்சைமிளகாய் + கசாகசா சேர்த்து வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் + பொட்டுக் கடலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நசுக்கி வைத்து இருக்கும் பூண்டு கலவையினை போட்டு வதக்கவும்.

அதன் பிறகு, அதில் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில், தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன், அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்க்கவும். அத்துடன் சிக்கன் துண்டு களையும் சேர்த்து நன்றாக கலந்து 1 - 2 நிமிடங்கள் வேக விடவும்

பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது + 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். தயிரினை மிக்ஸியில் போட்டு 3 - 4 முறை அடித்து கொள்ளவும் (இப்படி செய்வதால் தயிர் சேர்க்கும் பொழுது திரிந்த மாதிரி இருக்காது )

சுமார் 10 - 15 நிமிடங்கள் கழித்து சிக்கன் 90% வெந்த பிறகு, தயிரினை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி விடவும்

சுவையான மாப்பிள்ளை குருமா ரெடி இதனை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
Tags: