Mexican Rice யினை Spanish Rice என்றும் குறிப்பிடுவர்கள் இதில் அரிசியுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து சமைப்பாங்க.
பார்பதற்கு நம்மூர் தக்காளி சாதம் மாதிரி தான் இருக்கும் இதில் காரத்திற்கு Jalapeno Peppers தான் பயன்படுத்துவாங்க
Jalapeno Peppers பதிலாக பச்சை மிளகாய் கூட பயன்படுத்தலாம் ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் இருக்கும். இதில் தக்காளி அரைத்து சேர்ப்பதால் Rich Red கலரில் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
Long Grain Rice / புழுங்கல் அரிசி – 2 கப்
தக்காளி – 4
கொத்த மல்லி – சிறிதளவு கடைசியில் தூவ
உப்பு – சிறிதளவு
ஆலிவ் ஆயில் – 1 மேஜை கரண்டி
பொடியாக நறுக்கி கொள்ள :
பூண்டு – 4 பல்
வெங்காயம் – 1 பெரியது
காரட் , குடை மிளகாய் – 1 கப் நறுக்கியது
Jalapeño Peppers – 1 விதை நீக்கியது
செய்முறை :
வெங்காயம் , குடைமிளகாய், காரடினை பொடியாக நறுக்கியது Jalapeño மிளகா யினை விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும் பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளி யினை கழுவி பெரிய துண்டு களாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். பிரஸர் குக்கரில், எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இத்துடன் வெங்காயம் + காய்கள் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும். அரிசியினை தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
அதனை தண்ணீர் இல்லாமல் கழுவி, இத்துடன் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். அரைத்து வைத்துள்ள தக்காளி யினை இத்துடன் சேர்த்து கொள்ளவும்.
(கவனிக்க : தக்காளி விழுதினை சேர்க்கும் பொழுது அதனை அளந்து கொள்ளவும் 4 தக்காளிக்கு சுமார் 1 ½ கப் – 2 கப் வரை விழுது வரும் ).
பிறகு, 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் சேர்த்து கொள்ளவும். (கவனிக்க : தக்காளி விழுதினையும் சேர்த்து இருக்கின்றோம். அதனால் தண்ணீரின் அளவினை பார்த்து சேர்த்து கொள்ளவும் )
இத்துடன் உப்பு சேர்த்து கொள்ளவும். பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும். (கவனிக்க: கண்டிப்பாக 1 விசில் வந்ததுவுடன் அடுப்பினை நிறுத்தி விடவும் இந்த மெக்ஸிகன் ரைஸிற்கு அதிகம் குழைவாக இருக்ககூடாது )
பிரஸர் குக்கரினை திறந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். சுவையான மெக்ஸிகன் ரைஸ் ரெடி இதனை சிப்ஸ், முட்டை அல்லது எதாவது ப்ரையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.