சுவையான ஆலு பாலக் செய்வது எப்படி?





சுவையான ஆலு பாலக் செய்வது எப்படி?

பாலக்கீரை ஒரு வகை மூலிகைச் செடியாகும். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
சுவையான ஆலு பாலக் செய்வது எப்படி?
பழைய சாதம் தான் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு !
இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது. 

பாலக் கீரையை அதிகம் எடுத்து கொண்டால் ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது. 

எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு பஞ்சாபி ஸ்டைலில் செய்யப்படும் இந்த ஆலு பாலக்கை, சாதம், ரொட்டி, பரோட்டா, என அனைத்துக்கும் சைட் டிஷாக வைத்துக் கொள்ளலாம்.
பழைய சோறா? அப்படீன்னா என்ன?
தேவையான பொருட்கள்:

பாலக் கீரை – ஒரு கட்டு

சின்ன உருளைக் கிழங்கு – பன்னிரண்டு (வேக வைத்து தோலுரித்தது)

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

விழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று

விழுதாக அரைத்த தக்காளி – இரண்டு

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

தனியாதூள் – கால் டீஸ்பூன்

சீரக தூள் – கால் டீஸ்பூன்

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

சக்கரை – அரை டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – அரை டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – இரண்டு

பெருங்காயம் – சிறிதளவு
காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?
செய்முறை :
சுவையான ஆலு பாலக் செய்வது எப்படி?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேக வைத்து தோலுரித்த சின்ன உருளைக்கிழங்கு, வெங்காய விழுது,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பாலக் கீரையை அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, எறக்கி பரிமாறவும்.
Tags: