சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?





சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?

உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவதுஇரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது  நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். 
சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?
இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில்  தொப்பை குறையும். 

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச் சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற  உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். 

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடல் எடை குறைப்பு இலக்குகளை அடைய உதவும். நார் மற்றும் புரதத்தால் நிரம்பிய, வாழைப்பழங்கள் ஒரு துண்டுக்கு 100 கலோரிகளுக்கு மேல் இருந்தாலும் நீண்ட நேரம் உங்களை முழுமையாக வைத்திருக்கும். 

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சாப்பிடும் போது, ​​வாழைப்பழங்கள் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் நாள் முழுவதும் சோர்வடையாமல் இருக்கவும் உதவும். 

எனவே, வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் செயல்திறனில் ஆற்றல் அளவை அதிகரிப்பதற்கும் நேரடி தொடர்பு உண்டு.

வாழைப்பழம் அப்டியே சாப்பிடுபவரா நீங்கள்?... அதில் அப்பம் செய்யலாம் என்பதை அறிவீரா?. அதற்கான செய்முறையை பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

வாழைப்பழ அப்பம், வெறும் நொறுக்குத் தீனி என்பதை விட, பசியை போக்கி, உடல் வலுவூட்டும் ஒரு உணவுப் பொருளாகும்.
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப் வெல்லம் அல்லது 1/2 கப் (பொடித்தது)

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கனிந்த வாழைப்பழம் - 1

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். 

பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப் பழத்தை சேர்த்து,

அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!...
Tags: