என்ன இது வித்தியாசமா இருக்கே இந்த உருளைக்கிழங்கு ஜிலேபி! – இந்த உருளைக் கிழங்கு ஜிலேபியை நீங்கள் செய்து வைத்தால்,
உங்கள் வீட்டு பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பி டுவார்கள். சரி வாருங்கள் உருளை கிழங்கு ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ
தயிர் : 1 கப்
ஆரோரூட் பவுடர் : 50 கிராம்
எலுமிச்சம்பழம் : 1 சிறிது
நெய் : 1/2 கிலோ
சர்க்கரை : 1/4 கிலோ
குங்குமப் பூ – சிறிது
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொ தித்து வரும். பாகு இருகி வரும் போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்.
எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு காய்ந்ததும்,
பிசைந்து வைத்துள்ள கலவையை, துவாரம் செய்துள்ள துணிக்குள் வைத்து, முறுக் கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும்.
முறுக்கின் இரு புறமும் சிவக்க வெந்து எடுத்து, தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறி யதும் எடுத்து ஒரு பாத்திர த்தில் போடவும். உருளைக் கிழங்கு ஜிலேபி ரெடி.