ருசியான ஈஸி உருளைகிழங்கு ஃப்ரை செய்வது எப்படி? #friedrice





ருசியான ஈஸி உருளைகிழங்கு ஃப்ரை செய்வது எப்படி? #friedrice

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப் படுவதுண்டு. 
ஈஸி உருளைகிழங்கு ஃப்ரை
ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும். உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை தான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. 
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.

உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். 

முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணப் படுகிற்து.
தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - அரைக் கிலோ

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - அரை தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

தயிர் - 3 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !
செய்முறை: 
உருளைக் கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய உருளைக் கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மைக்ரோ வேவில் ஹையில் 5 நிமிடம் வைக்கவும். 

3 நிமிடத்தில் எடுத்து, கிளறி விட்டு மீண்டும் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உருளைக் கிழங்கை சேர்த்து தேவைக் கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும். 
சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பான் பூச்சியை !
அதில் பொடி வகைகளை சேர்த்து பிரட்டி மேலும் ஒரு நிமிடம் வைத்தி ருக்கவும். கடைசியில் தயிர் சேர்த்து கிளறி, தயிர் ஈரப்பதம் போனதும் இறக்கவும். சுவையான ஈஸி உருளை ஃப்ரை ரெடி.
Tags: