பூண்டு கஞ்சி செய்வது எப்படி?





பூண்டு கஞ்சி செய்வது எப்படி?

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
பூண்டு கஞ்சி
இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. 

பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். 
ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். 

உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது கல்லீரல். நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. 

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரு வகைகள் உள்ளன. 

பூண்டு உணவில் சேர்க்கப் படுவதால், (எல்.டி.எல்) கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். 
பூண்டு சேர்த்துக் கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.

இது இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்ற வற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றி விடும். 

கமகமக்கும் இந்த பூண்டு கஞ்சி, வயித்துப் புண்ணுக்கு அருமருந்தாகும். பூண்டு கஞ்சி செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி குருணை - அரை கப்

பாசிப் பயறு - ஒரு டேபிள் ஸ்பூன் ,

வெந்தயம் - 1 டீஸ்பூன்

செய்முறை :
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, பத்து பல் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

5 கப் தண்ணீரைக் காய வைத்து நன்றாக கொதித்ததும் பூண்டு, அரிசி பருப்பு கலவை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
நன்றாக குழைய வெந்ததும், ஒரு கப் கெட்டியான தேங்காய்ப் பாலை ஊத்தி, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Tags: