சுவையான சத்துமிக்க சத்துபானம் தயாரிப்பது எப்படி?





சுவையான சத்துமிக்க சத்துபானம் தயாரிப்பது எப்படி?

வளரும் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருந்தால் தான் போதிய உயரம், தேவையான வலிமை, உடலுக்கு எதிர்ப்பு சக்தி என்று அனைத்தும் கிடைத்து ஆரோக்கியமாக வளர்வார்கள்.
சத்துபானம் தயாரிப்பது எப்படி?
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உணவு பழக்கும் போதே சத்தான ஆகாரங்களும் பழகி விட வேண்டும். மாறிவரும் உணவு பழக்கத்தில் இன்று பிள்ளைகளுக்கு அவை சரிவர கிடைக்கவில்லை என்பதே உண்மை. 

இதனால் தான் பிள்ளைகள் வளர் பருவத்திலேயே அவ்வபோது அடிக்கடி காய்ச்சலை சந்திக்கிறார்கள். வயதான பிறகு வரவேண்டிய நோய்களையும் இளவயதிலேயே பெற்று விடுகிறார்கள். 
காலை உணவு அரசன் போல் என்று சொல்வதற்கேற்ப பிள்ளைகள் சரிவர சாப்பிடுவதில்லை என்பது தான் உண்மை. ஒரு புறம் பிள்ளைகள் காலையில் பள்ளிக்கு செல்லும் போது அவசர அவசரமாக கிளம்பி ஓடுகிறார்கள். 

பெண்களும் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளுக்கு சரியான முறையில் சத்தான உணவை கொடுப்பதிலும் சற்று சிரமமாக இருக்கிறது. 

அதனால் தான் வெளியில் இருக்கும் சத்துபானங்களாவது பிள்ளைக்கு வேண்டிய போஷாக்கை தரட்டுமே என்று விரும்புகிறார்கள்.

நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே சத்து பானங்கள் இருந்தது. வீட்டிலேயே தயாரிக்கும் இந்த சத்துபானம் இன்றைய காலத்தில் அனைவருக்கும் தேவை என்றே சொல்லலாம். 

சத்துமாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். 

இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தலாம்.

தேவையான பொருள்கள் :

சத்துமாவு - 2 ஸ்பூன்

பால் - 2 டம்ளர்

தண்ணீர் - 2 டம்ளர்

சர்க்கரை - தேவைக்கு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி வராமல் நன்கு கரைத்து, அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கிளறி இறக்கவும்.

மிதமான சூட்டில் சுவையான, ஆரோக்கிய மான சத்து பானம் தயார். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனை களும் குணமாகும்.

குறிப்பு

வயதானவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் குடுக்கவும். சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும். அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.

வேர்க்கடலை சேர்த்தால் நீண்ட நாட்கள் மாவு வைத்து பயன்படுத்த முடியாது. பீன்ஸ் வகைகளும் சேர்க்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் வைக்க முடியாது.
Tags: