சத்து மாவு தயாரிப்பது எப்படி?





சத்து மாவு தயாரிப்பது எப்படி?

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது சத்து மாவிப்பின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். 
சத்து மாவு தயாரிப்பது எப்படி?
சத்து மாவு என்பது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கரும்பு சாறு போன்றதொரு பானமாகும். இதன் விளைவாக, நேச்சுரல் சுகர் படிப்படியாக வெளியிடப்படும்.
பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !
தேவையான பொருட்கள்:

ராகி - 2 கிலோ

சோளம் - 2 கிலோ

கம்பு - 2 கிலோ

பாசிப்பயறு - அரை கிலோ

கொள்ளு - அரை கிலோ

மக்காசோளம் - 2 கிலோ

பொட்டுக்கடலை - ஒரு கிலோ

சோயா - ஒரு கிலோ

தினை - அரை கிலோ

கருப்பு உளுந்து - அரை கிலோ

சம்பா கோதுமை - அரை கிலோ

பார்லி - அரை கிலோ

நிலக்கடலை - அரை கிலோ

அவல் - அரை கிலோ

ஜவ்வரிசி - அரை கிலோ

வெள்ளை எள் - 100 கிராம்

கசகசா - 50 கிராம்

ஏலம் - 50 கிராம்

முந்திரி - 50 கிராம்

சாரப்பருப்பு - 50 கிராம்

பாதாம் - 50 கிராம்

ஓமம் - 50 கிராம்

சுக்கு - 50 கிராம்

பிஸ்தா - 50 கிராம்

ஜாதிக்காய் - 2

மாசிக்காய் - 2

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகிய வற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தயாரிப்பு முறை : -
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.  
சூடான பொருளை ஏன் ஊதி சாப்பிடக்கூடாது?
மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன.

தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். 

வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்
ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம். 
காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. 

கார்போ ஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Tags: