முட்டை இட்லி உப்புமா செய்வது எப்படி?





முட்டை இட்லி உப்புமா செய்வது எப்படி?

முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. 
முட்டை இட்லி உப்புமா செய்வது எப்படி?
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. 

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. 
எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். 

அதன் ஆற்றலும் அதிகரிக்கும். இட்லி உப்புமா என்றால் மூக்கை சுளிக்கும் குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, அதில் முட்டையை கலந்து, முழுக்க முழுக்க ஃபாஸ்ட் ஃபுட் போன்று பரிமாற முடியும். அதைச் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இட்லி – 4

முட்டை – 2

மிளகுப் பொடி - அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ற அளவு.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை நன்கு கிளறவும். முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்க்கவும். 

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான முட்டை இட்லி உப்புமா ரெடி.
Tags: