ஐஸ் க்ரீம் வகைகளில் என்றால் குல்ஃபியை விரும்பாதவர்களே இல்லை. இந்நிலையில், வீட்டிலேயே எளிமையாக செய்யும் பிஸ்தா ஃப்ளேவரில் கேசர் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 1 சிட்டிகை
க்ரீம் - 1-2 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
கேசர் - 1-2 சிட்டிகை
பிஸ்தா - 1/4 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் மிதமான சூட்டில், பால் பாதியாக சுண்டும் வரை நன்குகொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இப்போது அதில் க்ரீம் மற்றும் கண்டென்ட்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்க வேண்டும்.
பின்னர் அதோடு கேசரை சேர்த்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் நறுக்கிய பிஸ்தாவை போட்டு, இறக்கிவிட வேண்டும்.
பின் அதனை குளிர வைத்து, ஐஸ் க்ரீம் கப்-களில் ஊற்றி, மூடி போட்டு குச்சிகளை அதனுள் நுழைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். அதனை மறுநாள் எடுத்து சப்பிடலாம். இப்போது சூப்பரான கேசார் குல்ஃபி தயார்.
குறிப்பு: முக்கியமாக இந்த குல்ஃபியை முதல் நாள் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, மறுநாள் எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்.