தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பால் சுறா குழம்பு செய்வது எப்படி?





தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பால் சுறா குழம்பு செய்வது எப்படி?

நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். 
பால்சுறா குழம்பு
அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா மீனை புட்டு செய்து சாப்பிட்டால், தாய் பால் சுரக்கும்.தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய பால்சுறா குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டி யிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவு சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். 

கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு, குழம்பு செய்து சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

தேவையான பொருட்கள் :

பால் சுறா - 250 கிராம்

தேங்காய் - அரை மூடி (துருவியது)

புளி - ஒரு சிறிய உருண்டை

பூண்டு - 4 பல்

சீரகம் - 2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்து தட்டவும்)

காய்ந்த மிளகாய் - 1

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பால் சுறாவை சிறு துண்டு களாக நறுக்கி கழுவிக் கொள்ளவும், பூண்டைத் தட்டிக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி, தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தேவை யான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து வந்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். அதிகம் கிளறாமல் 5 நிமிடம் கழித்து அடுப்பி லிருந்து இறக்கி பரிமாறவும்.
Tags: