உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துவர நல்ல பலனளிக்கும். அதிக சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
இவற்றை சமைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள் !
மூட்டு வலிக்கு மருந்தாகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
சரி இனி இறால் மற்றும் குடைமிளகாய் கொண்டு இறால் குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1 கிலோ
பச்சை குடைமிளகாய் - 2
சிகப்பு குடைமிளகாய் - 1
வெங்காயம் - 4 பூண்டு - 6
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இயற்கை தரும் சத்துக்கள் !
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி, தண்ணீரை பிழிந்துக் எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கி, பூண்டை நசுக்கி வைத்து, அனைத்து தூள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை கொட்டி நன்கு வதக்கவும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி தனியாக வைக்கவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தனித்தனி யாக எடுத்து வைத்துள்ள தூளை கொட்டி மீண்டும் கிளறவும். குடைமிளகாய் அரை வேக்காட்டில் இருக்கும் பொழுது இறாலை கொட்டி எல்லாவ ற்றையும் சேர்த்து கிளறவும்.
பின்னர் 5 நிமிடம் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். ருசியான இறால் குடைமிளகாய் வறுவல் ரெடி.